திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு லால்குடி இருதயபுரம் வெற்றி வித்யாலயா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தபிலிப்ராஸ், திருச்சியை சேர்ந்த கோபி ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கார் டிரைவரான அரியலூர் மாவட்டம், குமுழியம் பகுதியை சேர்ந்த அஜித்னுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. 3 பேர் காயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்….
- by Authour
