Skip to content
Home » கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

விழுப்புரம் மேற்கு  காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரபாகரன். இவரது உறவினா்  புதுச்சேரி ஜிப்மரில்  சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஏட்டு பிரபாகரன் உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.  அப்போது  எதிரே வந்த கார் மோதி தூக்கி வீசியது..  இந்த விபத்தில்  ஏட்டு   பிரபாகரன், கார் ஓட்டுநர் சந்திரன், முகிலன், கதிரவன் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த  ஏட்டு மனைவி ஏஞ்சல் உள்பட 3 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.