சென்னையிலிருந்து திருச்சி நோக்கி நேற்று மாலை ஒரு கார் வந்து கொண்டிருந்தது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே தார் கலவை ஏற்றிகொண்டு வந்த லாரி காரை முந்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.