ஈரோடு மாவட்டம் சூளை என்ற பகுதியை சார்ந்த கிருஷ்ணகுமார் (40) குடும்பத்தினர் ஐந்து நபர்கள் சனிக்கிழமை மாலை ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஈரோடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலை ஆண்டிப்பட்டி கோட்டை அருகே வந்து கொண்டிருந்த பொழுது இன்று காலை 3.30 மணியளவில் எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரை ஓட்டிய கிருஷ்ணகுமார் (40) அவரது மகள் வருணா (10), மாமியார் இந்திராணி (67) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த சுதர்சன் (15) மற்றும் அவரது மனைவி மோகனா (40) இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து ஏற்பட்ட காரில் இருந்த கிருஷ்ணகுமார் இறந்த நிலையில் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டதால் அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கிரேன் உதவியுடன் மீட்டனர். திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..