திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகா காரின் டயர் வெடித்ததில் சென்டர் மீடியனை தாண்டி கார் சென்றது. அப்போது எதிர் திசையில் கார் வருவதைப்பார்த்த திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ்சின் டிரைவர் பிரேக் பிடித்ததில் பஸ் அருகில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகினர். மேலும் பஸ் கவிழ்ந்ததில் 34 படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
Tags:மணப்பாறை