இந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை பஸ்சில் ஏற்ற மறுத்த விவகாரம். நேற்று இரவு சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் சச்சின் சிவா போராட்டத்ததில் ஈடுபட்டார். பஸ்சில் மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி இல்லை என கூறி பஸ் கன்டக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. என்னை எதுவும் செய்ய முடியாது, நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என அலட்சியமாக ராஜா பேசியுள்ளார் நடத்துனர். இதனை தொடர்ந்து பஸ் கன்டக்டர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து இன்று அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.