சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , யாரை எல்லாம் கேப்டன் நம்பினாரோ, யாருக்கு எல்லாம் MLA சீட் கொடுத்தாரோ, அவர்கள் எல்லோரும் துரோகம் செய்தார்கள். அந்த வலி தான் அவரது உடல்நிலை மோசமாக காரணமாகிவிட்டது. எனக்கு அவசரமாக பதவி வழங்கப்படவில்லை. பெண்கள் அரசியலில் சாதிப்பது கடினம். ஜெயலலிதா தான் என் ரோல்மாடல். எனக்கு அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும் மிக பிடிக்கும். தேமுதிக தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லாமல், அன்னையாகவும் இருந்து வருகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , ஆளுநர் அவருக்கான பணியை செய்து கொண்டு இருக்கிறார்; முதலமைச்சர் அவருக்கான பணியை செய்து கொண்டு இருக்கிறார்; இதில் ஆளுநர் சொல்வது எல்லாம் தவறு என்று சொல்ல முடியாது; முதலமைச்சர் சொல்வது எல்லாம் சரி என்றும் சொல்ல முடியாது என்றார்.