2023-ஆம் ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மே 16-ஆம் தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் நிறைவுபெற உள்ளது. இந்த விழாவில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான பிரபலமான சினிமா கலைஞர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்தியாவில் இருந்து இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சாரா அலிகான், அதிதி ராவ் ஹைதாரி, சன்னி லியோன், மிருனால் தாக்கூர், ரவுடேலா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் பிரபல இயக்குனராக அட்லி, தனது மனைவி பிரியாவுடன் கலந்துக்கொண்டார். அவருக்கு சிவப்பு கம்பள விரிப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் பிரபல இயக்குனராக இருக்கும் அட்லி, ‘ராஜாராணி‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் சூப்பர் ஹிட் இயக்குனராக இருக்கும் அவர், தற்போது பாலிவுட் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.