நாகை (தனி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வை. செல்வராஜ் போட்டியிடுகிறார். இன்று அவர் நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளருடன்தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலையில்வந்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களிடம் கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் காவிரி நீர் பிரச்சனை, மழை, வெள்ள, பயிர்பாதிப்பு, மீன்பிடி தொழில் அபிவிருத்தி, இலங்கை ராணுவத்திடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பது உள்ளிட்ட விவகாரங்களை மையப்படுத்தி வாக்குகள் சேகரிப்பேன் என்றும் மகளிருக்கு திமுக வழங்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை அதிகரித்து வழங்கும் என்று தெரிவிக்கும் அதிமுகவில் தேர்தல் அறிக்கை எடுபடாது என்றும் கூறினார். மேலும் திமுக அரசு சொல்வதை தான் செய்யும் செய்வதைத்தான் சொல்லும் ஆனால் அதிமுக கட்சி அப்படி அல்ல என்றும் விமர்சித்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள ஐஜேகே கட்சியின் நிறுவனர் டி.ஆர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.இன்று மாவட்ட ஆட்சியர் க.கற்பகத்திடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
அப் போது ப.ஜ.க கட்சியின் மாநில நிர்வாகி சிவசுப்பிரமணியன்,ஐஜேகே கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.