தமிழகத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் அந்த வகையில் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் செலவு செய்யலாம் என உயர்த்தி தேர்தல் ஆணையம் அறி்வித்தது. ஏற்கனவே 70 லட்சமாக இருந்த தொகையை இப்போது 25 லட்சம் உயர்த்தி அ றிவித்து உள்ளது. இந்த அறிவிப்பினை இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தேர்தல் செலவுக்காக தமிழ்நாடு அரசிடம் முதல் தவணையாக ரூ.750 கோடி கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வேட்பாளர் செலவுத் தொகை ரூ.95 லட்சமாக உயர்வு…… சத்யபிரதா சாகு அறிவிப்பு
- by Authour
