Skip to content

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பு… திருச்சி கலெக்டர் தகவல்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை (Scholarship) 2023 -2024 ஆம் நிதியாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 1-5-ஆம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு 1,000 ரூபாயில் இருந்து 2,000 ம் ஆகவும், 6-8-ஆம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு 3,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும், 9-12-ஆம் வகுப்பு வரை 4,000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாகவும்
பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 6,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும்
தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டம்
7,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாகவும்
கல்வி உதவித்தொகை தற்போது இரட்டிப்பாக்கி வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 2023-2024ம் நிதியாண்டில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறுவதற்கு http://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *