மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 28.02.2023 அன்று பிற்பகல் 04.00 மணி அளவில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகியவற்றுடன் அரியலூர் கோட்டாட்சியரிடம் நேரடியாக மனுக்களை வழங்கி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.