புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை தாலுகா மருத்துவமனைக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியும், கட்டில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவற்றை மருத்துவமனை மருத்துவரிடம் ஒப்படைத்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா. இந்த நிகழ்வின் போது ரோட்டரிசங்கநிர்வாகிகள் மோகன்ராஜ்,சிவக்குமார் மற்றும்நகர்மன்ற தலைவர் திருமதி.திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, மற்றும் மருத்துவர்களும் ரோட்டரி சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
