அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலின் முன்பாக தான் கட்டியிருந்த கைலியை கிழித்து இரும்பு தடுப்பு கேட்டில் தூக்கு மாட்டி உட்கார்ந்து நிலையில் தூக்கில் தொங்கியவாறு மாற்றுதிறனாளி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். போலீசார் விசாரணையில் அவர் விளந்தை ஆண்டிமடம் அக்ரகார தெருவை சார்ந்த கட்டையர் என்பதும் இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் முன்பாக அமர்ந்திருப்பதும்.
இரண்டு கைகளும் இயங்காத நிலையில் அவருக்கு கோயிலுக்கு வருபவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கொண்டு வந்த உணவுகளை ஊட்டி விடுவது வழக்கமாக இருந்தது. இதன் மூலம் இறந்து போன கட்டையர் உயிர் வாழ்ந்த நிலையில் அவர் உட்கார்ந்த நிலையில் கட்டியிருந்த கைலியால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது ஜெயங்கொண்டம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு கைகளும் செயலிழந்த நிலையில் அவர் இறந்தது மர்மமாக உள்ளது என அவருக்கு உணவளித்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அவர் தானாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் அவரை தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இறந்து போன கட்டையருக்கு ஆறுமுகம் என்ற ஒரு அண்ணனும் பூச்சிக்கண்ணு என்ற ஒரு தங்கையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.