தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி நடந்தது. பாபநாசம் துணை சுகாதார நிலைய செவிலியர் சுமாலி மேரி பங்கேற்று மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும் என்பது உட்பட பயிற்சியளித்தார். முன்னதாக பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன் உட்பட மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் 40 பேர், அங்கன் வாடி பணியாளர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
