வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் க.கற்பகம் இன்று (15.11.2023) பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளும், வருவாய்த்துறையை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இருசக்கர வாகனத்தில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும், 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வாகனங்களில் ஏந்தியவாறு, அனைவரும் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி சங்குப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்துவமனை வழியாக பெர்மபலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மு.கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, வட்டாட்சியர்கள் அருளானந்தம்(தேர்தல் பிரிவு), சரவணன்(பெரம்பலூர்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.