புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , மாவட்ட கலெக்டர் மு.அருணா, தலைமையில் இன்று (24.08.2024) வழங்கினார். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் .திலகவதி செந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற
உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். மேலும் ஓட்டுநர்களிடம் ஊர்திக்கான சாவியையும் வழங்கினார்.