Skip to content

உலக அழகி போட்டியாளர்… புற்றுநோய்க்கு பலி

உருகுவே நாட்டை சேர்ந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர் 26 வயதில் மரணம் அடைந்துள்ளார். மோன்டிவீடியோ, உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் (வயது 26) 2015-ம் ஆண்டில் உலக அழகி போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்து இருக்கிறார்.

அவருடைய மரணம் உருகுவே மற்றும் உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவருடைய சகோதரர் மெய்க் டி அர்மாஸ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சிறிய சகோதரியே உயரே செல்லவும். எப்போதும் என்றென்றும் என பதிவிட்டு உள்ளார். அவருடைய மறைவுக்கு உருகுவேவின் மிஸ் யூனிவர்ஸ் அழகியான கர்லா ரொமிரோ, என்னுடைய வாழ்வில் நான் சந்தித்தவர்களில் மிக அழகிய பெண்களில் ஒருவர் என தெரிவித்து உள்ளார். இதேபோன்று 2021-ம் ஆண்டுக்கான மிஸ் உருகுவே அழகியான லோலா டி லாஸ் சான்டோஸ், எனக்கு அளித்த அனைத்து ஆதரவுக்காகவும், அன்பு, மகிழ்ச்சி என இன்றளவும் அவை என்னுடன் மீதமுள்ளன. அதற்காக எப்போதும் உங்களை நான் நினைவுகூர்வேன் என பதிவிட்டு உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!