திருச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காகவும், குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை சரியான ஆதாரத்துடன் அவர்கள் மீது வழக்கு தொடரவும் இன்று முதல் ஹைவே பேட்ரோல் மற்றும் போக்குவரத்து காவல்
துறையினருக்கு சட்டையின் முன்பக்கத்தில் பொருத்திக் கொள்ளும் கேமரா இன்று வழங்கப்பட்டது.
திருச்சி மன்னார்புரம் சிக்னல் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகர காவல் துறை ஆணையர் சத்திய
பிரியா கலந்து கொண்டு மாநகர மற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு கேமராவை வழங்கினார்.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்… இதுவரை திருச்சி மாநகரில் கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்ற 52 மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – மேலும் புகார்கள் வரும் பட்சத்தில் நடவடிக்கை தொடரும், சட்டத்திற்கு புறம்பாக தவறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக திருச்சி மாநகரில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒலிக்க 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.