அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 18 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால் அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். எனவே இந்த தீர்ப்பு 3வது நீதிபதியின் தீர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் இன்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்கபூர்வாலா இந்த வழக்கில் 3வது நீதிபதியாக ஐகோர்ட் நீதிபதி சி.வி. கார்த்திகேயனை நியமித்தார். எனவே அவர் விரைவில் இந்த வழக்கு விசாரணையை தொடங்குவார் என தெரிகிறது.