Skip to content

பைக் விபத்து…. ஒரு காலை இழந்த இளம் நடிகர்…

  • by Authour

கன்னடத்தில் இளம் நடிகராக இருப்பவர் சூரஜ்குமார். 24 வயதாகும் அவர், முன்னணி நடிகர் சிவராஜ் குமாரின் உறவினர் ‌ஆவார். அவரது இயற்பெயர் சுரஜ்குமார் என்றாலும், சினிமாவிற்காக துருவன் என்று பெயரை மாற்றிக் கொண்டார். தற்போது அவர் ‘பகவான் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சில சிக்கல்கள் காரணமாக அந்த படம் வெளியாகாமல் இருக்கிறது.

surajkumar

இது தவிர புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மைசூரில் வசித்து வரும் அவர் ஊட்டிக்கு பைக் மூலம் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். மைசூர் – குண்டலூர்பேட்டை நெடுஞ்சாலையில் பேகுர் என்ற இடம் அருகே டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதினார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மைசூரில் உள்ள தனியார்  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சூரஜ்குமாரின் உயிரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் ஒரு கால் அகற்றப்பட்டது. கன்னட நடிகை நடிகருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!