விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தை பொருத்தவரை இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என 3 முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் தொகுதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக விஜயதாரணி இருந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவிலூர் தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவின் பொன்முடி இருந்தார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். இதனை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் இன்று திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது..
பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்…
- by Authour
