ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவும் உள்ளது. இந்த ஓட்டுகளை கள்ள ஓட்டுகளாக பயன்படுத்தக்கூடும் என சி.வி.சண்முகம் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு நாளை விசாரிக்கிறது.
