ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புனு தாக்கல் அடுத்த 2 நாட்களில் முடிவடைகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்பது குறித்து இன்னும் முடிவாகாத நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஸ் இளங்கோவன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்காக திமுக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியின் பொறுப்பில் வார்டு எண்கள் 16, 17 மற்றும் 25 வார்டுகளில் உள்ள 22 வாக்குசாவடிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு தங்கி தேர்தல் பணியினை மேற்கொண்டு வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் E.V.K.S இளங்கோவனை ஆதரித்து, ஜீவா நகர் (வார்டு 16, பூத் 25 & 26) பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார்.. வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். குறிப்பாக முதியவர்கள் அமைச்சரின் கையை பிடித்து பாசமாக விசாரிப்பதும்.. ஆராத்தி தட்டுடன் நின்று கொண்டிருந்த சிறுமிகள் அவருக்கு திலகமிட ஆசைப்படுவதை பார்த்து உட்கார்ந்து அதனை அன்பாக ஏற்றுக்கொண்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. மற்றும் சிறியவர்கள் என அனைத்து தரப்பினரின் வரவேற்பை அமைச்சர் செந்தில்பாலாஜி அன்பாக ஏற்றுக்கொண்டார்.