ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தங்களது அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என ஒபிஎஸ் கூறினார். சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தேர்தலில் திமுகவை எதிர்க்க கூடிய தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. அதிலும் எங்களுக்கு தான் உண்டு. எங்களது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஒரு வேளை இந்த தேர்தலில் பாஜ போட்டியிட்டால் நாங்கள் ஒதுங்கிக்கொள்வோம் என்றார். அதிமுக யாருக்கு? என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூறியுள்ள நிலையில் ஓபிஎஸ் தனது அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என கூறியுள்ளதால் இரட்டை இலை முடக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..