கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி யது. கேரளாவில் புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவர் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்தார். மதியம் 12.30 மணிக்கு இந்த தொகுதியின் முடீவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சாண்டி உம்மன்(காங்கிரஸ்)78,098 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தாமஸ் 41,644 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் உம்மன் சாண்டி 8 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். அந்த தேர்தல்களை விட இப்போது உம்மன்சாண்டி மகன் சாண்டி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
உ.பி.யில் கோஷி தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் சுதாகா்சிங், பாஜ வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
மேற்குவங்கத்தில் துப்குரி தொகுதியில் திரிணாமுல் காங். வேட்பாளரை விட காங் வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
திரிபுராவில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் தொகுதியிலும் பாஜக முன்னணியில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி தொகுதியில் ஏ.ஜே.எஸ்.யூ. கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது.