காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனால் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ஒரு தொகுதி காலியானால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த 6 மாத காலம் அவகாசம் உள்ளது. நீதித்துறையில் தீர்வுகாண(ராகுல்காந்தி மீதான வழக்கு) கீழமை கோர்ட்டு 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது. ஆகையால் நாங்கள் காத்திருக்கிறோம்’ என்றார்.