Skip to content
Home » கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

  • by Senthil

அதிகாலையில் இன்னும் குளிர் இருந்தாலும், காலை 10 மணிக்கெல்லாம்  கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 4 மணி வரை வெயில் தனது  சுட்டெரிக்கும் பணிகளை தொடங்கி விட்டது. இதனால் மத்தியான வேளைகளில் வீதிகளில் மக்கள் நடமாட்டமே குறைந்து விட்டது.

எனவே திருச்சிஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த வருடமே இனி வருடம் தோறும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு அவர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் பேரில்  கோயில்களில் நீர்மோர் வழங்கும்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தி இருந்தார்.எனவே  இன்று காலை 11 முதல் ஸ்ரீரங்கம்  அரங்கநாதசுவாமி கோயிலில், துரை பிரகாரத்தில் கட்டணம் மில்லா வரிசையிலும், கொடி மரம் அருகில் கட்டண தரிசன வரிசையிலும் சுமார் 5000 பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் (இஞ்சி, கறிவேப்பில்லை , கொத்தமல்லி , பச்சைமிளகாய் ,பெருங்காயம் , உப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது ) கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.  இணை ஆணையர் செ.மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி  இதனை துவக்கி வைத்தார்.

அப்போது கண்காணிப்பாளர் மு.கோபலகிருஷ்ணன் , உதவி மேலாளர் தி.சண்முகவடிவு அர்ச்சகர் சுந்தர்பட்டர் உடனிருந்தனர். கோடை காலம் முழுவதும் உபயமாக மூலிகை நீர் மோர் வழங்க திருச்சி வேதா பால் நிறுவனர் ரமேஷ் முன் வந்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!