திருவாரூரில் இருந்து நாகை்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சிக்கல் அடுத்த பொரவச்சேரி அருகே பேருந்து வந்துக் கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி சென்ற பேருந்து அரசுப் பேருந்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது அரசப் பேருந்தின் பின்புறத்தில் தனியார் பேருந்து பலமாக மோதியது. இதில் அரசுப் பேருந்தின் பின்பக்கம் பக்கம் நசுங்கியதில் கண்ணாடி உடைந்தது. அதே போன்று தனியார் பேருந்தின் முன் பக்க கண்ணாடியம் உடைந்து
நொறுங்கியது. இதில் அரசுப் பேருந்தில் பின் பக்கம் அமர்ந்திருந்தவர் தனியார் பேருந்தில் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் என 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட பொது மக்கள் மூன்று 108 வாகனங்கள் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பேருந்து சாலையிலயே நின்றுக் கொண்டிருந்ததால் நாகை , திருவாரூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது மக்களே பேருந்தை இயக்கி ஓரம் கட்டி நிறுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். நாகை அருகே முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து அரசுப் பேருந்து மீது மோதியதில் 20 பேர் பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.