கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 55. இவர் இலை வியாபாரம் செய்து வருகிறார். நெய்தலூர் காலனி சேர்ந்த மகேந்திரன் வயது 35. இவரும் இலை வியாபாரம் செய்து வருகிறார். கணேசனுக்கும் மகேந்திரனுக்கும் கொடுக்கல் வாங்கல் மற்றும் தொழில் பிரச்சனையில் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை நெய்தலூர் கடைவீதியில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது மகேந்திரன் கையால் தாக்கியதில் கீழே விழுந்த கணேசன் மயக்கமடைந்து சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து
நங்கவரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உட்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து கரூர் குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பி கல்யாணசுந்தரம் தலைமையில் குளித்தலை மாயனூர் காவல் ஆய்வாளர்கள் விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மகேந்திரனை தேடி வருகின்றனர்.