திருச்சி, பெரிய கம்மாள தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(37). இவர் சத்திரம்பஸ் ஸ்டாண்டிலிருந்து லால்குடி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் ஆங்கரை சரோஜா அரண்மனை பகுதி அருகே சென்றபோது படிக்கட்டில் இருந்து ஆனந்த் தவறி கீழே விழுந்தார். ஆனந்த்க்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவருடைய மனைவி ஐஸ்வர்யா இச்சம்பவம் குறித்து போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் பஸ் டிரைவர் கருப்பண்ணன் மீது வழக்கு பதிவு செய்து லால்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
