திருச்சி, ராம்ஜி நகர் வில்சன் பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் பஸ் சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ்க்கு எதிரே வந்த கரூர், குளித்தலையை சேர்ந்த அன்பழகன் ஓட்டி வந்த டூவலீர் பஸ் மீது பலமாக மோதி விபத்தானது. இதில் அன்பழகன் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தனியார் பஸ் டிரைவர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
