சென்னை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர் செல்லும் (A1) மாநகர பஸ் டயர் வெடித்தது. பிளைவுட் தூள்தூளாகி புகை மண்டலமாக மாறியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பஸ் டயருக்கு நேராக உட்கார்ந்து இருந்த இளைஞருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.