மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி நேரம் என்பதால் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து பேருந்துகளை நிறுத்திய மாவட்ட ஆட்சியர் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கிவிட்டு, படிக்கட்டில் பயணம் செய்வது எவ்வாறு ஆபத்தானது என்பது குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அழைத்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றக்கூடாது என்றும் மாணவர்களை இப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு மாணவர்களை அதில் அனுப்பி வைத்தார். கல்லூரி நேரங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….
- by Authour
