அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே நாளை முதல் ஸ்டிரைக் தொடங்கும் என தொழிற்சங்கத்தினா் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சென்னை திருவான்மியூர் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கே தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
