அரியலூர் நகராட்சியின் பேருந்து நிலையம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகள் முடியும் வரை தற்காலிக பேருந்து நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில் வாணி மஹாலின் எதிர்புறம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, பொதுமக்கள் அமருவதற்கான நிழற்குடை மற்றும் இருக்கைகள், கழிப்பிட வசதிகள், மின்சாரம்
உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணாஇன்று நேரில் பார்வையிட்டு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, அரியலூர் நகராட்சி ஆணையர்(பொ).தமயந்தி, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மேலும் அரியலூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ரேசன் கடையை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.