இயக்குனரும், நடிகருமான சேரன் கடந்த 13ம் தேதி புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் தொடர்ந்து ஹாரனை ஒலித்துக்கொண்டே வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சேரன் காரை நிறுத்தி, டிரைவரிடம் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில் பொருத்தியிருந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில் இன்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடலூர் போலீசில் டைரக்டர் சேரன் மீது கடலூர் போலீசில் புகார் செய்தனர். அதில் பஸ்சில் குறைபாடுகள், புகார்கள் இருந்தால் போலீசில் தான் சேரன் புகார் செய்ய வேண்டும். அதைவிடுத்து அவர் டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்தது சரியில்லை என அந்த புகாரில் கூறி உள்ளனர். பஸ் அதிபர்கள் புகார் கொடுத்த சம்பவம் இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.