மராட்டிய மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நடந்த பேருந்தின் டயர் வெடித்தது. இதனால் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழுந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. அப்போது டீசல் டேங்க் வெடித்தது. இதனால் பேருந்து தீப்பிடித்தது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். அவர்களால் தப்பிக்க முடியவில்லை. பயணிகளில் 25 பேர் உடல் கருகி இறந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.