திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் வலசுப்பட்டியில் வசிப்பவர் ராமகவுண்டர் மகன் சண்முகம் (46). இவர் அரசு பஸ் டிரைவர். இந்நிலையில் நேற்று சண்முகம் வேலைக்குச் சென்றுள்ளார். மேலும் அவரது மனைவியும் 100 நாள் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த அவரது மகள் கால்நடைகளை மேய்த்துவிட்டு பிற்பகல் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நான்கரை பவுன் மதிப்பிலான 10 மோதிரங்கள் மற்றும் ரூ. 17000 திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இப்புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.