புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 குழந்தைகள் மற்றும் ஆட்டோ டிரைவர் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். பேருந்து வேகமாக வந்ததாலே இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பஸ் மீது ஆட்டோ மோதி விபத்து.. பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்…
- by Authour
