புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை சென்ற தனியார் (எம்ஏகே) பஸ் இன்று மதியம் அன்னவாசல் அருகே சென்ற போது பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு இலுப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.