கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் இன்று காலை சென்றுகொண்டிருந்தது. கோமலங்கலம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அதிக அளவில் இருந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் அங்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதுடன் நிவாரணப்பணிகளையும் முடுக்கி விட்டார்.