அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் , கிழக்கு சண்முகாபுரம் காலனி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், தாங்கள் சாப்பிடுவதற்காக பர்கர் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். சென்னையில் சோதனை நடைபெறும் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் ‘பர்கர்’ வந்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளனர். 6 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், சாப்பிடுவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் பர்கர் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். அதிகாரிகள் ஆர்டர் செய்த ரூ.175 மதிப்புள்ள 15 பர்கர் அமைச்சர் வீட்டிற்கு வந்தடைந்தது.
அதிகாரிகள் வேளா வேளைக்கு வகை வகையாக சாப்பிடும் நிலையில் காலையில் அமைச்சரை பார்க்க வந்தவரை தண்ணீர் கூட குடிக்க விடாமல் அடைத்து வந்தனர். இதனால் அவர் மயங்கும் நிலைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.