வங்கதேசத்தில் நேற்று அரசுக்கு எதிராக நடந்த வன்முறையில் சுமார் 130 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் பிரதமர் சேக் ஹசீனா மாளிகைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். தீவைப்பு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட முஜிபுர் ரகுமானின் உருவச்சிலையை டாக்காவில் இதை்தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி தற்காலிக அரசு அமைத்துள்ளது. இதனால் அங்கு ஓரளவு நிலைமை கட்டுக்குள் அடங்கியது.
இந்த நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்த சேக் ஹசீனா, இங்கிருந்து வெளியேறினார். அவர் இங்கிலாந்து செல்லக்கூடும் என தெரிகிறது.
இந்த நிலையில் வங்கதேசகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி எம்.பி, வங்கதேச வன்முறையின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதா என கேள்வி எழுப்பியுள்னார். தற்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து வங்க தேச கலவரம் குறித்து பிரதமர் மோடி தனது அமைச்சரவையை கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார்.