வங்க தேசம் உருவாகும் போது ஏற்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பத்துக்கு வங்கதேசத்தில் 30 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் பிரதமர் சேக் ஹசீனா மீண்டும் அந்த இட ஒதுக்கீடு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். இதனால் பிரதமருக்கு எதிராக வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் பலியானார்கள். பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் போராட்டம் மேலும் பரவியதால் பிரதமர் சேக் ஹசீனா இன்று நாட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் பரவியது. பிரதமர் டாக்காவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது . அவர் தனது தங்கையுடன் ராணுவ ஹெலிகாப்டரில் தப்பி டில்லி் வந்து விட்டதாக முதலில் கிடைத்த தகவல்கள் கூறுகிறது.
இதற்கிடையே ராணுவம் ஆட்சியை பிடித்து விட்டதாகவும், சிறிது நேரத்தில் ராணுவ தளபதி டெலிவிஷனில் உரையாற்றுவார் என்றும் வங்கதேசத்தில் வதந்தி பரவியது.
வங்கதேசத்தை உருவாக்கிய சேக் முஜிபுர் ரகிமானின் மகள் தான் சேக் ஹசீனா.்