Skip to content
Home » பட்ஜெட் கூட்டத்தொடர்.. கரூரில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்பு..

பட்ஜெட் கூட்டத்தொடர்.. கரூரில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்பு..

கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் வாயில் கறுப்பு துணி கட்டி, கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் சாதாரண கூட்டம் முடிந்தபின், பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. மாநகராட்சி வரவு, செலவு அறிக்கையை மேயர் கவிதா கணேசன் உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க மேயர் கவிதா கணேசன் மற்றும் ஆணையர் சுதா ஒருசேர பட்ஜெட் அறிக்கையுடன் வந்தபோது, புகைப்படம் எடுப்பதற்கு தன்னை அழைக்கவில்லை என துணை மேயர் தாரணி சரவணன் மேயரிடம் கோபித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டம் முடிந்த பின் அதிமுக கவுன்சிலர் செய்தியாளர்களை சந்தித்தார்,

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாநகராட்சி கூட்டத் தொடரில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போது, நாங்கள் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மேலும், கேள்வி எழுப்ப ஆரம்பித்தவுடன் மேயர் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறார். இதுபோல் எந்த மாநகராட்சியிலும் நடைபெறாது. மேலும், கூட்டத் தொடர் ஒன்றில் கேள்வி எழுப்பியதற்காக இரண்டு கூட்டத்திலிருந்து எங்களை மேயர் சஸ்பெண்ட் செய்தார். அது குறித்து வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் காரணம் கேட்டதற்கு இதுவரை உரிய விளக்கம் தரப்படவில்லை.

எனவே, நாங்கள் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி, கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!