நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டம் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும். முதல் அமர்வு ஜன. 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், 2வது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெறும். இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.