நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான கூட்டு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும்6-வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 9 மணி அளவில் நிதி அமைச்சகத்தில் இருந்து நாடாளுமன்றம் வந்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் , மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று தேர்தல் வரைக்கான காலத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலை மனதில் கொண்டு பல சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் இது மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களுக்கான அறிக்கையாகவே இருக்கும். புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரி்விக்கிறார்கள்.