ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு ப்ரோபா3 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்த இந்த செயற்கை கோள்கள் ஏவப்பட இருந்தது. கடைசி நேரததில் அதில் உள்ள தொழில் நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டது. இதனால் ராக்கெட் ஏவுதலை நாளைக்கு ஒத்திவைத்தனர். நாளை மாலை 4.12 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
