Skip to content

திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அந்த பகுதியை அதிரடியாக சோதனை செய்த பொழுது திருச்சி அரியமங்கலம் ராஜப்பா நகரை சேர்ந்த அப்துல் கரீம் மகன் சாகுல் அமீது (36),அவனது தம்பி அப்துல் ரஹீமான் (33)ஆகிய இருவரும் காட்டூர் கடைவீதியில் குட்கா பான் மசாலா விற்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் சாகுல் அமீதை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 7 கிலோ கான்ஸ் 5 கிலோ கூலி 8 கிலோ விமல் பாக்கு உட்பட சுமார் 22 கிலோ குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்ததோடுஅவனை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சாகுல் அமீது தம்பியான அப்துல் ரஹீமானை தேடி வருகின்றனர். அப்துல் ரஹீமான் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!